சேலம் சீலநாயக்கன்பட்டியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்தவர் பலி

சேலம் சீலநாயக்கன்பட்டியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்தவர் பலி
X
போலீசார் விசாரணை
சேலம் குகை ராமலிங்க சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 40). இவரும், நண்பர் யுவராஜ் என்பவரும் கடந்த 6-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலைக்கு சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை யுவராஜ் ஓட்டினார். ஊத்துமலை 3-வது வளைவில் வண்டி திரும்பும் போது பின்னால் அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story