திருட்டு வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது

திருட்டு வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது
X
போலீசார் நடவடிக்கை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் கிட்டு (வயது 23). கடந்த 2021-ம் ஆண்டு சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சேலம் சிறையில் இருந்தவர் ஜாமீனில் வந்து தலைமறைவானார். அவரை பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. உடனே போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் புதிய பஸ் நிலைய வளாகத்தில் சுற்றித்திரிந்த கிட்டுவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Next Story