கெங்கையம்மன் கோவிலில் ஆடி பெருவிழா

X
திருக்கோவிலுார் மேல வீதியில் உள்ள பழமையான கெங்கை அம்மன் கோவிலில், ஆடி பெருவிழா கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. பக்தர்கள் தென்பெண்ணை ஆற்றில் காப்பு கட்டி, கெங்கையம்மன், மாரியம்மன், பெருமாள் உள்ளிட்ட தெய்வங்கள் ஆவாகனம் செய்து, சக்தி கரகம் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து தினசரி மாலை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று பகல் 11:00 மணிக்கு, தென்பெண்ணை ஆற்றில் பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சாகை வார்த்தலும், இரவு கும்பம் கூட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்தி ருந்தனர்.
Next Story

