குளச்சலில் மீனவர் குண்டர் சட்டத்தில் கைது

குளச்சலில் மீனவர் குண்டர் சட்டத்தில் கைது
X
பாலியல் குற்றவாளி
குமரி மாவட்டம் குளச்சல், ரீத்தாபுரத்தில் சென்னையை சேர்ந்த தேசலிங்கம் (45) என்பவர் மனைவியுடன்  வசித்து வந்தார். மீனவரான இவர் மண்டைக்காடு பகுதி உறவுக்கார 17 வயது  பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்து, சிறுமி கர்ப்பமானார். புகாரின் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் தேசலிங்கத்தை  கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்திருந்தனர். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி ஸ்டாலின், கலெக்டர் அழகு மீனாவுக்கு பரிந்துரை செய்திருந்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் தேசலிங்கம் நேற்று பாளையங்கோட்டை சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.
Next Story