ராமநாதபுரம் அஞ்சலக ஊழியர் மரணம் காவல்துறையினர் விசாரணை

ராமநாதபுரம் அஞ்சலக ஊழியர் மரணம் காவல்துறையினர் விசாரணை
X
திருவாடானை அருகே தொண்டியில் மத்திய அரசு ஊழியர் மர்மமான முறையில்மர்ம  மரணம் குறித்து போலீசார் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடணையில் தலைமை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது இங்கு மத்திய பிரதேச மாநிலம்,  சாகார் வசந்த் விகார் காலனி, சிவாலயா என்ற முகவரியைச் சேர்ந்த ஆர்யா என்பவரது மகன் பங்கஜ் ஆர்யா (24) இவர் அஞ்சல் துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் தொண்டியில் தனியாக வீடு பிடித்து தங்கி திருவாடனைக்கு தினமும் வந்து பணியாற்றி சென்று வந்துள்ளார். இவருடன் அஞ்சல் துறையில் பணியாற்றும் பெண் ஒருவரும் உடன் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் இந்த வீட்டில் இருந்தே வேலைக்கு சென்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் வழக்கம்போல் அந்த பெண் காலை வேலைக்கு சென்று சென்ற நிலையில்  பங்கஜ் ஆர்யா நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. உடன் அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்ததில் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். உடன் தொண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையினர் சென்று பார்த்த போது உடல் தூக்கில் தொங்கியபடி இருந்ததுள்ளது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவாடனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த மர்ம மரணம், கொலையா  என அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பங்கஜ் ஆர்யா ௹ காசிதாஸ் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி முழுமை விடம் சான்றிதழ் பெற்றுள்ளார் மேலும் ஐஏஎஸ் தேர்வுக்காகவும் தயாராகி வந்ததாகவும் சொல்லப்படுகிறது இவர்கள் குடும்பத்தார்களும் அரசு பொறுப்பில் இருந்து வருவதாகவும் சொல்லப்பட்டு வந்த நிலையில் இவரது மரணம் தற்போது மர்மமாகவே உள்ளது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து கொண்டிருக்கின்றனர் அதனால் அவரது உடல் திருவாடானை மருத்துவமனை பிணக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
Next Story