ராமநாதபுரம் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பு

X
ராமநாதபுரம்புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மாவட்டத்தின் ஒன்றியங்கள் மற்றும் கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடமிருந்து கோரிக்கைகளை பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், அவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறினார். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வணிக வளாக கடைகள் சட்டத்திற்கு புறம்பாக ஏலம் விடப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தனது சமூகத்தினருக்கே கடைகள் ஒதுக்கியதாகவும், சில நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் மனைவி அல்லது தந்தை பெயரில் கடைகள் பெற்றதாகவும் குற்றம்சாட்டினார். 15 நாட்களுக்குள் அவற்றை ரத்து செய்யாவிட்டால் மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என எச்சரித்தார். மேலும், மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆணவக் கொலைகளை கண்டித்து, கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் வாக்குறுதி அளித்திருந்தும், ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் மத்திய ஆளும் பாஜக ஆகிய மூன்றும் இவ்விஷயங்களில் மௌனம் சாதிப்பது சாதிய உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்றார். கடந்த ஜூலை 27 அன்று திருநெல்வேலி மாவட்ட பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை எடுத்துக்காட்டிய அவர், கொலைக்குப் பின்னணி சமூக அமைப்புகளை அரசு தடை செய்ய வேண்டும் என்றார். ஆனால், அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் அரசு சில சாதியகளுக்கு ஒருதலைப்பட்சமாக ஆதரவளிப்பதற்கான சான்று என குற்றம்சாட்டினார்.
Next Story

