குமரியில் இல்லந்தோறும் தேசிய கொடி விற்பனை

குமரியில் இல்லந்தோறும் தேசிய கொடி விற்பனை
X
சுதந்திர தினம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று புதன்கிழமை இல்லம்தோறும் தேசிய கொடி விற்பனையை பாஜக எம்எல்ஏ. எம்ஆர் காந்தி,தொடங்கி வைத்தார். மேலும் பொது மக்களுக்கு தபால் நிலையங்களில் காகித தேசியக்கொடி விற்பனை நடைபெற்று வருவதை தெரியப்படுத்தும் விதமாக பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது தபால் நிலையத்திலிருந்து, நாகராஜர் கோவில் வழியாக மீண்டும் தபால் நிலையம் வந்து அடைந்தது. இதில் கல்லூரி மாணவிகள், தபால் நிலைய ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் எம்எல்ஏ. எம்.ஆர்.காந்தி, தலைமை தபால் நிலைய கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர்.செந்தில்குமாரிடம் இருந்து முதல் விற்பனை பெற்றுக் கொண்டார்.
Next Story