ராமநாதபுரம் மனதிறனைப் பகுப்பாய்வு கருத்தரங்கு நடைபெற்றது

அமிர்தா வித்யாலய பள்ளியில் மாணவர்களின் மனதிறனைப் பகுப்பாய்வு செய்யும் விதமாக மாணவர்களுக்கான கருத்தரங்க நடைபெற்றது
ராமநாதபுரம் அமிர்தா வித்யாலய பள்ளியில் மாணவர்களின் மனதிறனைப் பகுப்பாய்வு செய்யும் விதமாக மாணவர்களுக்கான கருத்தரங்க நடைபெற்றது. இந்த அமர்வினை பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லெட்சுமி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி முதல்வர் திருமதி கோகிலா மற்றும் பள்ளி துணை முதல்வர் தீரஜ் லட்சுமண பாரதி ஆகியோரால் சிறந்த முறையில் இந்நிகழ்வானது நடைபெற்றது. இவ்அமர்வானது மாணவர்கள் எதிர்காலத்தில் என்ன படிக்கலாம் என்று குழப்பத்தில் இருப்பவர்களுக்காக அமிர்தா விஸ்வ வித்யா பீடம் பல்கலைக்கழக பேராசிரியர்களான அபிஜித் மற்றும் லெட்சுமி ஆகியோரால் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. முதல் நாள் அமர்வில் மாணவர்களுக்கு சோதனைத் தேர்வின் மூலமாகவும் நேரடி உரையாடல் மூலமாகவும் அவர்கள் என்ன படிக்கலாம் என்று கூறியும் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்குச் சிறந்த முறையில் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் அமர்வில் பெற்றோர்களுடன் மாணவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் திறன்களுக்கு ஏற்றவாறு என்ன படிக்கலாம் என அறிவுறுத்தினார்கள். இதன் மூலமாக பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு புரிதலும் தெளிவும் ஏற்படும் விதமாக இவ்அமர்வானது இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் மாணவர்களின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story