சொத்துவரி முறைகேடு: தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் கைது!

X
மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்த அளவிலான வரி விதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையில், ரூ. 150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாநகராட்சியில் பணியாற்றியவரும், தற்போது தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையராக பணியாற்றி வரும் சுரேஷ் குமார் என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story

