மன்னார்குடியில் பாஜக தேசிய கொடி ஊர்வலம்

X
சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார்குடியில் பாஜக சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாஜக இளைஞரணி சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. நாட்டின் 79ஆவது சுதந்திர தின விழா வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில் மன்னார்குடியில் உள்ள நேதாஜி சிலையில் இருந்து தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. நாட்டின் ஒற்றுமையையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தும் வகையில் பெண்கள் உள்ளிட்ட பாஜகவினர் தேசிய கொடியை கைகளில் ஏந்தி வந்தே மாதரம் என கோஷமிட்டபடி பெரிய கடை வீதி பந்தலடி ருக்மணி பாளையம் சாலை வழியாக மீண்டும் நேதாஜி சிலை அருகே ஊர்வலம் நிறைவடைந்தது.
Next Story

