அபூர்வ ராகங்கள் வெளியிட்ட திரையரங்கில் கூலி:

நடிகர் ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்கள் துவங்கி, கூலி திரைப்படம் வரை அவரின் 50 ஆண்டுகால சினிமா பயணத்தில் அனைத்து படங்களையும் வெளியிட்ட பெருமை சேர்க்கும் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கம். தூத்துக்குடியில் 1928 ஆம் ஆண்டு நாடக கொற்றவையாக தொடங்கப்பட்ட பாலகிருஷ்ணா திரையரங்கம் தற்போது காலத்திற்கு ஏற்ப மல்டிபிளக்ஸ் திரையரங்கமாக மாற்றப்பட்டுள்ளது. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் தியேட்டர் நடத்துவது என்பது மிகவும் சிரம மானகாரியம். அதிலும் வீட்டில் இருந்தபடியே படம் பார்க்கும் காலம் வந்த பிறகு, டி.வி., சேனல்கள், ஓ.டி.டி., தளங்களோடு போட்டி போட்டு தியேட்டர் தொழிலை விடாமல் நடத்துவது என்பது ஒரு பெரிய சவால் தான். அந்த சவாலை எதிர்கொண்டு இன்றும் வெற்றி நடைபோடுவது ஒரு சில திரையரங்கம் தான் குறிப்பிடும்படியாக இருப்பது தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கம். முதன் முதலில் ஹீரோ வாக நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் 1975ம் ஆண்டு துவங்கி தற்போது கூலி 2025 வரை 50 ஆண்டுகள் ரஜினி படங்களை வெளியிட்டு அவருடன் பயணித்த பெருமை பாலகிருஷ்ணா திரையரங்கம் கூலி திரைப்படம் வரும் 14 ம் தேதி வெளி யாகிறது. இந்த 50 ஆண்டுகளில் இயக்குனர் கே. பாலச்சந்தரில் துவங்கி, லோகேஷ் கனகராஜ் வரை பல இயக்குநர்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த் 171 திரைப்படங்கள் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இவரின் முதல் பட மான அபூர்வ ராகத்தை வெளியிட்ட திரையரங்கம் ஒன்று தற்போது கூலி திரைப்படத்தையும் வெளியிடுகிறது என்றால் வரலாற்றில் பதிக்கக்கூடிய ஒன்றுதான். இந்த பெருமை துாத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கத்தை சேரும்.அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரையிலான இடைப்பட்ட 50 ஆண்டுகால பயணத்தில் ரஜினியுடன் இணைந்து வந்த ஒரே பாலகிருஷ்ணா திரையரங்கம் இது தான்.
Next Story

