கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு 705 கன அடியாக இருந்த நீர்வரத்து, தொடர் மழையால் நேற்று 928 கன அடியாக நீர் அதிகரித்தது. இதனால் அணையிலிருந்து பாசன கால்வாயில் 179 கன அடி, தென்பெண்ணை ஆற்றில் 414 கன அடி என மொத்தம் 593 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Next Story

