செஞ்சி நூலகத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது

செஞ்சி நூலகத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது
X
பேரூராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டார்
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி முழு நேர நுாலகத்தில் நுாலக தினம், பாட நுால்கள் வெளியீடு, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை என முப்பெரும் விழா நடந்தது.பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி தலைமை தாங்கி நுாலகத் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினார். புதிய உறுப்பினர்களை கவுரவித்தார். தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழி பாடநுால்களை வாசகர் பயன்பாட்டிற்கு வெளியிட்டார். நுாலகர் பூவழகன் வரவேற்றார். புகைப்பட கலைஞர்கள் சங்க நிர்வாகி புகழேந்தி மாணவர்களை உறுப்பினராக சேர்க்க 500 ரூபாய் உறுப்பினர் கட்டணம் வழங்கினார். எழுத்தாளர் தமிழனின் மற்றும் வாசகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். நுாலக பணியாளர் நன்றி கூறினார்.
Next Story