கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மூன்று வீடுகள் இடித்து அகற்றம்

கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மூன்று வீடுகள் இடித்து அகற்றம்
X
கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மூன்று வீடுகள் இடித்து அகற்றம்
செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம் - முடிச்சூர் சாலையில், சுண்ணாம்பு கால்வாயில் இருந்து, பெருங்களத்துார் வழியாக அடையாறு ஆற்றுக்கு பாப்பான் கால்வாய் செல்கிறது.பெருங்களத்துார், பாரதி நகரை ஒட்டியுள்ள மூவேந்தர் நகர் வழியாக, பாப்பான் கால்வாயின் இணைப்பு கால்வாய் செல்கிறது. இதை ஆக்கிரமித்து, மூன்று வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில், தகவல் அறியும் ஆணையம் உத்தரவுப்படி, படப்பை பாசனப்பிரிவு அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சென்று, பொக்லைன் இயந்திரத்தின் மூலம், கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை, நேற்று இடித்து அகற்றினர்.
Next Story