கரூர்-தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.
கரூர்-தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கரூர் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம்,வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் கண்ணன் , மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய காலத்தில் அதிகப்படியான முகாம்கள் நடத்தப்படுவதை குறைத்து வாரத்திற்கு இரண்டு முகாம்கள் மட்டும் நடத்திட வேண்டும்.இந்த திட்டப் பணிகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும்.கூடுதலான தன்னார்வலர்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story






