பேருந்தில் பயணியிடம் நகை திருடிய பெண்ணை, சக பயணியர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

பேருந்தில் பயணியிடம் நகை திருடிய பெண்ணை, சக பயணியர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு
X
பேருந்தில் பயணியிடம் நகை திருடிய பெண்ணை, சக பயணியர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு
உத்திரமேரூர் அடுத்த கடச்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா, 41. இவர், நேற்று காலை 11:30 மணியளவில், செங்கல்பட்டில் இருந்து உத்திர மேரூர் செல்லும் தடம் எண்: 'டி68' பேருந்தில் பயணம் செய்தார். நெல்வாய் நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது, பெண் ஒருவர் அவசர அவசரமாக இறங்கி ஓடியுள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த பிரேமா, தன் பையில் பார்த்த போது, அதில் வைத்திருந்த நான்கு சவரன் நகை காணாமல் போனது தெரிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், கூச்சலிட்டுள்ளார். உடனே, சக பயணியர் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து, படாளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், நகை திருட்டில் ஈடுபட்டது, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா, 61, என தெரிந்தது. பின், போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
Next Story