வேலூரில் நடைபயிற்சி சென்றவர் பலி!

வேலூரில் நடைபயிற்சி சென்றவர் பலி!
X
வேலூரில் நடைபயிற்சி சென்றவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் உள்ள காவல் பட்டாலியனில் சூப்பிரண்டாக (அலுவலக உழியர்) பணியாற்றி வருபவர் ஜெயசீலன் (47). காட்பாடி திருநகர் பகுதியை சேர்ந்த இவர் இன்று (ஆகஸ்ட் 13) காலை வேலூர் கோட்டையில் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story