கரூர்-எரிபத்தநாயனார் விழாவை கொண்டாட மாலை அணிந்த சிவனடியார்கள்.

கரூர்-எரிபத்தநாயனார் விழாவை கொண்டாட மாலை அணிந்த சிவனடியார்கள்.
கரூர்-எரிபத்தநாயனார் விழாவை கொண்டாட மாலை அணிந்த சிவனடியார்கள். சிவபெருமானின் 64 நாயன்மார்களில் முக்கியமானவர் எரிபத்த நாயனார்.இவர் நாள்தோறும் பூக்களை பறித்து சிவபெருமானுக்கு பூஜை செய்வது வழக்கம். அவ்வாறு புரட்டாசி மாதம் நவராத்திரி 8-ம் நாளில் பூக்குடலையில் பூக்களை எடுத்துச் சென்றபோது பட்டத்து யானை தடுத்தது. இதனால் சினம் கொண்ட எரிபத்த நாயனார் மழு என்ற ஆயுதத்தால் யானையின் தும்பிக்கையை துண்டித்தார். இந்த சம்பவத்தை நினைவூட்டும் விதமாக ஆண்டுதோறும் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் எரிபத்த நாயனார்க்கு விழா எடுப்பது வழக்கம். இன்னும் 48 நாட்கள் உள்ள நிலையில் நேற்று மாலை பசுபதீஸ்வரர் கோயிலில் சிவனடியார்கள் விரதம் இருந்து மாலை அணிந்து எரிபத்த நாயனார் விழாவை கொண்டாட ஆயத்தமானார்கள்.
Next Story