பூமி பூஜையில் கலந்து கொண்ட எம்எல்ஏ

மதுரை தெற்கு தொகுதியில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் எம்எல்ஏ கலந்து கொண்டார்.
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 44 வது வார்டு மீனாட்சி நகர், காமராஜர் தெரு, ஆசாத் தெரு, அம்சத்தெரு ஆகிய தெருக்களில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று (ஆக.13)நடைபெற்றது.. இப்பூமி பூஜையை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் துவங்கி வைத்தார்.. உடன் மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி மாயழகு, உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன் மற்றும் பொதுமக்கள் பலர் இருந்தனர்.
Next Story