கோயில் நிதியிலிருந்து தேனியில் திருமண மண்டபம் கோர்ட் உத்தரவு

கோயில் நிதியிலிருந்து தேனியில் திருமண மண்டபம் கோர்ட் உத்தரவு
X
பழநி கோயில் நிதியிலிருந்து தேனியில் திருமண மண்டபங்கள் - தற்போதைய நிலை தொடர ஹைகோர்ட் உத்தரவு
திண்டுக்கல், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபரி நிதியிலிருந்து தேனி, ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கம்பராயப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.3 கோடியே 75 லட்சத்தில் திருமண மண்டம் அமைக்கப்படும். உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் மற்றும் நரசிங்கப்பெருமாள் கோயில் நிலத்தில் ரூ.4 கோடியே 54 லட்சத்தில் திருமண மண்டபம் அமைக்க 2024 டிசம்பரில் அறநிலையத்துறை முதன்மை செயலர் அரசாணை வெளியிட்டார். அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும் என ராம ரவிக்குமார் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஷ்ணுவர்தன் ஆஜரானார். நீதிபதிகள், 'இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும். இதுபோல் நிலுவையிலுள்ள பிற வழக்குகளுடன் சேர்த்து ஆக.19 ல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்,' என உத்தரவிட்டனர்.
Next Story