டிராக்டரில் மணல் திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

டிராக்டரில் மணல் திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
X
வத்தலகுண்டு அருகே டிராக்டரில் மணல் திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
திண்டுக்கல், நிலக்கோட்டை வட்டாட்சியர் அளித்த தகவலின் பேரில் கடந்த 7-ம் தேதி வத்தலக்குண்டு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சேக்அப்துல்லா மற்றும் காவலர்கள் கணவாய்பட்டி பைபாஸ், மஞ்சல் ஆற்றுப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது/அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக ஆற்று மணல் திருடி டிராக்டரில் கடத்தினார். போலீசாரை கண்டதும் மணல் கடத்திய நபர் டிராக்டரை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார். போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கட்டகாமன்பட்டியை சேர்ந்த முனியப்பன் (எ) முனியசாமியை கைது செய்தனர் மேலும் முனியசாமி மீது 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story