கரூர் -நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம்.
கரூர் -நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நிறுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மாநில தலைவியை ஆர்ப்பாட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கோபி,மாநிலத் தலைவர் பொன் ஜெயராம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது அனைத்து நிலை ஊழியர்களுக்கும் குறைதீர்க்கும் கூட்டம் மாதம் தோறும் நடத்திட வேண்டும். நீதிமன்ற வழக்குகளை திறமையோடு கையாளும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலகத்தில் சட்ட அலுவலர் பணியிடம் வழங்கிட வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள அடிப்படை பணியாளர் பணியிடங்களை உடனே நிரப்பிட அரசாணை வழங்கிட வேண்டும். ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர் பணி மாறுதல்களை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
Next Story





