புன்னம்சத்திரம் பிரிவு சாலையில் டூவீலர்கள் மோதல். மூன்று பேர் படுகாயம்.
புன்னம்சத்திரம் பிரிவு சாலையில் டூவீலர்கள் மோதல். மூன்று பேர் படுகாயம். கரூர் மாவட்டம் , புகலூர் தாலுகா , குப்பம் அருகே உள்ள VN புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து வயது 47. இவரது மருமகள் சத்யா வயது 18. இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 9 மணி அளவில் ஈரோடு - கரூர் சாலையில் டூவீலரில் சென்றனர். இவரது வாகனம் புன்னம் சத்திரம் தனியார் பள்ளி பிரிவு அருகே சென்றபோது, அதே சாலையில் கரூர் ஆத்தூர் பிரிவு 4வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் வயது 77 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் மாரிமுத்து ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு வாகனங்களும் கீழே விழுந்ததில் மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதில் மாரிமுத்து மற்றும் சத்யா ஆகிய இருவரையும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதே போல ஆறுமுகத்தை கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து மாரிமுத்து அளித்த புகாரில் விபத்து ஏற்படும் வகையில் டூ வீலரை ஒட்டிய ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story





