தாந்தோணி மலை - டூவீலர் கார் நேருக்கு நேர் மோதல். நண்பர்கள் இருவர் படுகாயம்.

தாந்தோணி மலை - டூவீலர் கார் நேருக்கு நேர் மோதல். நண்பர்கள் இருவர் படுகாயம்.
தாந்தோணி மலை - டூவீலர் கார் நேருக்கு நேர் மோதல். நண்பர்கள் இருவர் படுகாயம். கரூர் அடுத்த தாந்தோணி மலை காளியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் ராம்குமார் வயது 26. இவரது நண்பர் கரூர் அடுத்த கோவைக்குளம் குச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் வயது 26. இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கரூர் - செல்லாண்டி பாளையத்திலிருந்து பழைய சுக்காலியூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றனர். டூ வீலரை பார்த்திபன் ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம் தாந்தோணி மலை அருகே உள்ள தனியார் மெஸ் அருகே சென்றபோது , எதிர் திசையில் கரூர் மாவட்டம் , மன்மங்கலம் தாலுகா , அப்பிபாளையம் , பாலத்துபுதூர் பகுதியைச் சேர்ந்த தீபக் வயது 23 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் பார்த்திபன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலருடன் கீழே விழுந்ததில் ராம்குமார் மற்றும் பார்த்திபனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது . இதில் பார்த்திபனை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் , ராம்குமாரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக பார்த்திபன் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய தீபக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல் துறையினர்.
Next Story