மன்னேரியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு விழா விமரிசை

மன்னேரியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு விழா விமரிசை
X
பழையசீவரத்தில் மன்னேரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், இவ்வாண்டின் ஆடி மாத விழா கடந்த காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரத்தில் மன்னேரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், இவ்வாண்டின் ஆடி மாத விழா கடந்த 7ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. குடம் அலங்காரத்தில் அம்மன் தரிசனமும், மதியம் 2:00 மணிக்கு கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் விழாவும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சியை தொடர்ந்து, இரவு 10:00 மணிக்கு அர்ச்சுனன் தபசு நாடகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கவுரவர்களுக்கு எதிரான குருஷேத்திர யுத்தத்தில் வெற்றி பெற பாசுபத அஸ்திரம் வேண்டி அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. விரதம் இருந்த நாடக கலைஞர் அர்ச்சுனன் வேடம் அணிந்து, 50 அடி உயர தபசு மரத்தில் ஏறி, மரத்தின் உச்சியில் நின்று அம்மன் புகழ் பாடினார். விழாவில், பழையசீவரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.
Next Story