குளச்சலில் இளைஞர் காங்கிரஸ் உண்ணாவிரதம் 

குளச்சலில் இளைஞர் காங்கிரஸ் உண்ணாவிரதம் 
X
டாஸ்மாக் கடை அகற்ற கேட்டு
குளச்சல் அரசு பயணியர் விடுதி சந்திப்பு  அருகே அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுக்காத நிலையில்  கடையை நிரந்தரமாக  அகற்றக்கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று குளச்சல் காமராஜ் பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் லாரன்ஸ் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜீவா, நாகர்கோவில் மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் விஜி மோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ஆரோக்கிய மோகன், அஜீஸ், அபினேஷ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பஷீர் கான், முன்னாள் மீனவர் காங்கிரஸ் தலைவர் மணி, குளச்சல் தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜேக்கப் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
Next Story