திற்பரப்பில் கோவில் மரத்தை அகற்ற முயற்சி - எதிர்ப்பு
குமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் பல தலைமுறைளுக்கு முன்பு உள்ள சாமுண்டேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோவிலின் அருகே மிக உயரமான இரண்டு மரங்கள் உள்ளன. இந்த நிலையில் தனி நபர் இந்த கோவில் நிலத்தை தனது நிலம் என உரிமை கொண்டாடி, இன்று திடீரென போலீஸ் பாதுகாப்புடன் மரத்தை அகற்ற வந்தார். காவல்துறையினர் தனிநபர் மரம் வெட்டுவதற்காக பாதுகாப்பு பணிக்கு இந்தப் பகுதிக்கு வந்த சம்பவம் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களையும் பக்தர்களை அதிர்சிக்கு உள்ளாக்கியது. இதனால் அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் அந்த கோயில்வளாகத்தில் குவிந்தனர். மேலும் மரத்தை சுற்றிலும் வேலியடைத்து நின்றனர். தொடர்ந்து பொதுமக்கள் முகாமிட்டு வருகின்றனர். அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு தனி நபருக்குக்கு ஆதரவாகச் சட்டத்தை மீறி செயல்படும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story



