கரூர்-தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கரூர்-தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
கரூர்-தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைமையிடச் செயலாளர் ரவிச்சந்தர் , மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமலி டெய்சி, முன்னாள் மாவட்ட தலைவர் தீன தயாளன் , மாநில துணைத்தலைவர் சக்திவேல் உள்ளிட்ட சங்கத்தின் பொறுப்பாளர்கள் , உறுப்பினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அனைத்து பள்ளிகளுக்கும் அடிப்படை பணியாளர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களை நியமன செய்ய வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
Next Story