நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுக அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்களை செய்ல்படுத்துவோம் முன்னாள் முதலமைச்சர் பேச்சு

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுக அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்களை செய்ல்படுத்துவோம் முன்னாள் முதலமைச்சர் பேச்சு
X
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுக அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்களை செய்ல்படுத்துவோம் முன்னாள் முதலமைச்சர் பேச்சு
திருப்பத்தூர் மாவட்டம் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் இதனை தொடர்ந்து இன்று திருப்பத்தூர் வந்த எடப்பாடி பழனிச்சாமி புதுப்பேட்டை ரோடு பகுதியில் இருந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வரை பிரச்சார பேருந்தில் அமர்ந்து சாலையின் இரண்டு புறமும் திரண்டு இருந்த அதிமுக தொண்டர்களை பார்த்து கைவசத்தவாறு மேடை அருகே வந்தார் பின்னர் அவர் பேசியது திருப்பத்தூர் கூட்டத்தை பார்த்தால் வருகின்ற தேர்தலில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியை அதிமுக வென்றுவிட்டது என்று முடிவானது இன்றைய தினம் திமுக முதலமைச்சர் இன்று தொடங்கி இருக்கும் திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி புதிதாக திட்டத்தை தொடங்குவது போல் காட்டுகின்றனர் இந்த மாவட்டத்திற்கு இதுவரை திமுக எந்த நல்ல திட்டத்தை கொண்டு வந்ததா அதிமுக ஆட்சியில் இந்த வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கியது நாம் பெற்ற பிள்ளைக்கு பேர் இருப்பது தான் இன்றைய முதலமைச்சர் உடைய வாடிக்கை இந்த மின் கட்டண உயர்வுக்கு அண்ணா திமுக ஆட்சி கண்டபோது உதவி மின் திட்டத்திற்கு கையெழுத்து போட்ட காரணத்தினால்தான் உயர்வு ஏற்பட்டது என்று ஒரு பொய்யான அவதூறான செய்தியை பரப்பி வருகிறார் மற்ற மாநிலங்களில் அனைவரும் உரை மின் திட்டத்தை ஏற்றுக் கொண்ட போது அதிமுக மட்டுமேஅதில் குறிப்பிடப்பட்டவாறு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்வை ஏற்படுத்த முடியாது என மறுத்தது அதிமுக ஆட்சி உதய் மின் திட்டத்தில் இரண்டு கோரிக்கைகளை நாம் முன் வைத்தது ஒன்று மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின்சார உயர்வு ரத்து செய்ய வேண்டும் அடுத்தது விவசாயிகளுக்கான மின் இணைப்புகளுக்கு மோட்டார் பொருத்தக் கூடாது இந்த இரண்டு நிபந்தங்களை களையும் மத்திய அரசு ஏற்றதால் தான் உதய் மின் திட்டத்திற்கு அதிமுக ஆதரவளித்தது 2017 இல் இருந்து நான்காண்டு காலம் மின்கட்டண உயர்வை அதிமுக உயர்த்தவில்லை தற்போது விடியா திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு நம் மீது பழியை போடுகின்றனர் இன்று எல்லா இடங்களிலும் ஊழல் உதாரணமாக மதுரை மாநகராட்சியில் 150 கோடி ஊழல் மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் அப்படி என்றால் திமுக ஊழல் செய்தது உண்மை தானே சென்னை மாநகராட்சியில் திமுகவை சேர்ந்த பொறுப்பாளர்கள் கொள்ளையடிக்கின்றனர் கக்கூஸ் கழுவுவதில் கூட ஊழல் செய்த ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் சென்னை மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தூய்மை பணியாளர்கள் அதிமுக ஆட்சியில் போராட்டம் செய்த போது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவருடன் இணைந்து போராட்டத்தில் கலந்து கொண்டார் அப்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறிவிட்டு தற்போது அவர்கள் ஆட்சியிலேயே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் எல்லாவற்றுக்கும் மேலாக மனித உடல் உறுப்புகளை திருட ஆரம்பித்து விட்டது திமுகவினர் திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் கிட்னி திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது சிறுமியிலிருந்து பாட்டி வரை பாதுகாப்பு இல்லை திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பயந்து கொண்டிருக்கின்றனர் காவல்துறைக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை திருப்பூரில் உதவிக்காக காவல் ஆய்வாளர் வெட்டி கொலை செய்யப்படுகிறார் காவல் துறைக்கே இந்த நிலைமை திமுகவின் நோக்கமே கலெக்ஷன் கரெக்ஷன் கமிஷன் தமிழ்நாட்டில் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபா அதிகம் வைத்து இருக்கிறார்கள் இதன் மூலம் வருடத்திற்கு 5400 கோடி மேல் இடத்திற்கு செல்கிறது இப்படிப்பட்ட ஆட்சி தேவையா அதிமுக மக்களுக்கான கட்சி திமுக குடும்பத்திற்கான கட்சி அதிக நாள் சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்தவர் துரைமுருகன் கட்சிக்காக பல நேரங்களில் ஜெயிலுக்கு போய் இருக்கிறார் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை கருணாநிதியின் பேரன் என்ற ஒரே காரணத்திற்காக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி துரைமுருகன் இருக்க வேண்டிய இடம் அண்ணா திமுக அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம் உதாரணமாக ஏற்காட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு எம்எல்ஏ பதவி கொடுத்தோம் இன்றைக்கு 207 அரசாங்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளன இப்படிப்பட்ட நிர்வாகம் தான் திமுக ஆட்சியில் நடக்கும் நடைபெற்று வருகிறது இன்றைக்கு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை மூடு விழா செய்தனர் திமுகவினர் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் ஏழு புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து சுமார் 3000 பேர் இன்று மருத்துவம் படிக்க வைத்தது அதிமுக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் நமது வேட்பாளர் யார் நின்றாலும் அவரை வெற்றி பெற செய்யுங்கள் நம்முடைய கூட்டணி வேட்பாளர் யார் என்றாலும் அவர்களை வெற்றி பெற செய்யுங்கள் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே .சி. வீரமணி, ராஜசபா எம்பி தம்பிதுரை நகர செயலாளர் டி டி குமார் திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர்கள் திருப்பதி ,செல்வம், கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் , மணிகண்டன் உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story