தளிர்விடும் பாரதம் சார்பில் சுதந்திர தினப் போட்டிகள்

Komarapalayam King 24x7 |13 Aug 2025 7:53 PM ISTகுமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் சுதந்திர தினப் போட்டிகள் நடந்தது.
குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் சுதந்திர தினத்தையொட்டி, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. ஆலோசகர் லட்சுமணன் தலைமை வகித்தார். தளிர்விடும் பாரதம் தலைவர் சீனிவாசன் வரவேற்றார். குமாரபாளையம் சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த 12 அரசு பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். செம்மொழியாம் தமிழ்மொழி, கடவுள் எனும் விவசாயி, இயற்கையோடு நான் எனும் தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 153 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர். சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் சிவபிரகாஷ், குப்புசாமி, காவல் உதவி ஆய்வாளர்கள் நடராஜ் மற்றும் பிரபாகரன், சமூக ஆர்வலர் சித்ரா ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு மறைந்த சமூக சேவகர் அறிவொளி சரவணன் நினைவாக அறிவொளி விருது, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. செயலர் பிரபு நன்றி கூறினார்.
Next Story
