காவல்துறை அணிவகுப்பு
நீலகிரி மாவட்டம் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி குன்னூரில் காவல்துறை அணிவகுப்பு நடந்தது........ . விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் 50 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது . இதனை தொடர்ந்து இன்று மாலை குன்னூரில் காவல்துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் அதிவிரைவு படை மற்றும் குன்னுார் காவல் துனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ராஜ்குமார் தலைமையிலும் குன்னூர் சீம்ஸ் பூங்கா பகுதியிலிருந்து துவங்கிய அணிவகுப்பு பெட்போர்டு, ப்ளூஹில்ஸ், ஒய் எம் சி ஏ, அரசு மருத்துவமனை , மவுண்ட் ரோடு வழியாக பஸ் நிலையம் அருகே வரை அணி வகுப்பு நடந்தது இதில் குன்னூர் உட்கோட்ட காவல் நிலையங்களை சார்ந்த 100 க்கு மேற்பய்ட காவல் துறையினர் பங்கேற்றனர் .
Next Story



