வலு தூக்கும் போட்டியில் சாதனை படைத்த வீரருக்கு எம்எல்ஏ பாராட்டு

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைச் சேர்ந்த ஜெயம் ஜிம் மாஸ்டர் ஸ்ரீதரன், இவர் தூத்துக்குடி மாவட்டத்தில், தமிழ்நாடு வலு தூக்கும் சங்கத்தால் நடத்தப்பட்ட, மாநில அளவிலான வலு தூக்கும் போட்டியில், 74 கிலோ எடை, சீனியர் பிரிவில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். இந்நிலையில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் வலு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீதரனுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். அப்போது, ஜிம் மாஸ்டர் ஸ்ரீதரன் தான் பெற்ற பதக்கம், சான்றிதழை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
Next Story

