கோட்டையூர் கிராமத்தில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டிடம்.. சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை ...*

X
விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டிடம்.. சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை ... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கோட்டையூர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் 30 குழந்தைகள் வரை கல்வி பயின்று வருகின்றனர். பல வருடங்களுக்கு முன்பு இந்த அங்கன்வாடி மையம் கட்டப்பட்டதன் காரணமாக சேதம் அடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் எப்பொழுது இடிந்து விடும் என்ற நிலையிலேயே இந்த கட்டிடம் உள்ளது. மேலும் மழையை காலங்களில் சேதம் அடைந்து கட்டிடம் காணப்படுவதால் கட்டிடத்திற்கு உள்ளே மழை நீரானது விழும் நிலை இருந்து வருகிறது.மேலும் இந்த அங்கன்வாடி மையத்தில் கழிவறை வசதி உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.உடனே மாவட்ட நிர்வாகம் அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

