சிவகாசி வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் அலுவலகப் பணிகள் குறித்து    மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகாசி வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் அலுவலகப் பணிகள் குறித்து    மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
X
சிவகாசி வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் அலுவலகப் பணிகள் குறித்து    மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் அலுவலகப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்   மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்தும், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் குறித்தும் கேட்டறிந்து பல்வேறு துறை சார்ந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய நாட்களுக்குள் தீர்வு காணுவதற்கு தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து, சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை    மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும்  பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் சமூகநலத்துறை அலுவகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், நலத்திட்ட உதவிகள், திட்டங்கள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவலத்தை பார்வையிட்டு, கோப்புகள், அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள், பராமரிக்கப்படும் பதிவேடுகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, இலவச பயண அட்டை, இலவச சீருடைகள் உள்ளிட்டவை குறித்து  அலுவலர்களிடம் கேட்டறிந்து அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.
Next Story