பேராவூரணி ஒன்றியத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி, பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்பயிற்சியில், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காலகம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்து 40 மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மேனகா தலைமை வகித்தார். காலகம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இராமநாதன் முன்னிலை வகித்தார். வட்டார வள மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன் வரவேற்றார். இதில், பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்களிப்பு குறித்து, பயிற்சியாளர் சிவரஞ்சனி கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். நிறைவாக, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மகேஸ்வரி நன்றி கூறினார்.
Next Story

