தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம்

X
2025-2026 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த மதத்தை சார்ந்தவர்களுக்கு ECS முறையில் நபர் ஒருவருக்கு ரூ.5,000 வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கான விண்ணப்ப படிவங்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன் ‘ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005” என்ற முகவரிக்கு 30.11.2025-ஆம் தேதிக்குள் அனுப்பிட வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Next Story

