பத்திரகாளி அம்மன் கோயிலில் சர்க்கரை பொங்கல் நாளை

X
குமரி மாவட்டம் பாத்திமாநகர், குரியன் விளையில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை தினத்தன்று பந்திருநாழி சர்க்கரை பொங்காலை வழிபாடு நடப்பது சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த மாதம் 15-ம் தேதி நாளை ஆடிப் பொங்காலை சிறப்பு வாய்ந்தது ஆகும். அன்றைய தினம் காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை, மாலை கோயில் சுற்றும் விளக்கு ஏற்றுதல். முத்துக்குடை அணிவகுப்புடன் தேவியின் சுயம்பு எழுந்தருளல், சிறப்பு பூஜைகள், பந்திருநாழி சர்க்கரை பொங்காலை வழிபாடு, சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை, உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Next Story

