விபத்தில் காயமடைந்த கோர்ட் ஊழியர் சாவு

X
குமரி மாவட்டம் தக்கலை, காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜு (59). இவர் பத்மநாபபுரம் கோர்ட் ஊழியர். சம்பவ தினம் ஆலய திருவிழாவில் பங்கு பெற மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, நிலை தடுமாறியதில் கீழே விழுந்து ராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் மீட்டு நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று மாலை ராஜு உயிரிழந்தார். தக்கலை போலீசார் ராஜு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Next Story

