குமரி மருத்துவக்கல்லூரியில்  மாற்றுத் திறனாளிகள் தர்ணா

குமரி மருத்துவக்கல்லூரியில்  மாற்றுத் திறனாளிகள்  தர்ணா
X
அலுவலர்களை கண்டித்து
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்,  பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள்,  நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரை சந்தித்து மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர மருத்துவ முகாம் குறைபாடுகள்,  அதன் தீர்வுகள் தொடர்பாக மனு அளிக்க வந்தனர்.  அப்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதை அடுத்து  மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துவிட்டு செல்லுங்கள் என்று அங்கிருந்த அலுவலர்கள் கூறியிருக்கின்றனர்.  அப்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் அரை முன் மாற்றுத்திறனாளிகள் திரண்டு இருந்தனர். திடீரென அலுவலர்கள் தங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலக கட்டிடத்தின் வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது மாற்றுத்திறனாளிகள் மருத்துவக் கல்லூரி முதல்வரை நேரடியாக சந்தித்து மனு அளித்துவிட்டு தான்  செல்வோம் என்று கூறி,  தொடர்ந்து நிர்வாக அலுவலக வாயிலில் அமர்ந்து இருந்தனர்.  இந்த போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் வில்சன் மற்றும் அருள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story