சுடுகாடு கேட்டு புகலூர் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

சுடுகாடு கேட்டு புகலூர் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது
சுடுகாடு கேட்டு புகலூர் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கரூர் மாவட்டம் சார்பாக,கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், காருடையாம்பாளையம் கிராமம், கிழக்குத் தெரு அருந்ததியர் மக்களின் பயன்பாட்டில் உள்ள மயான இடம் புல எண்.100-னை மயானத்திற்கான இடமாக உத்தரவாதப்படுத்த வலியுறுத்தியும், மேற்படி இடத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மற்றும் மயான பயன்பாட்டை தடுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும், புகழூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டு வாகனத்தில் போலீசார் அழைத்து சென்றனர்.
Next Story