கரூர் கலெக்டரின் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு.

கரூர் கலெக்டரின் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு.
கரூர் கலெக்டரின் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு. கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்களிடம் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் கரூர்,தெற்கு காந்தி கிராமம்,இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஹக்கீம் வயது 43. ஆகஸ்ட் 12ம் தேதி காலை 6:30 மணி அளவில் அவரது வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஹக்கிமின் மனைவி சாபுராபானு வயது 41என்பவர் அளித்த புகாரில் தாந்தோணி மலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story