அங்கன்வாடி மையம் கட்டும் பணி துவக்கம்

X
சின்னசேலம் அடுத்து தென்செட்டியந்தல் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ 16.45 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டடம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. துணைச் சேர்மன் அன்புமணிமாறன் தலைமை தாங்கி பணிகளை துவங்கி வைத்தார். ஊராட்சிதலைவர் சுலோச்சனா கண்ணன், ஒன்றிய பொறியாளர் அருண்பிரசாத், கிளைச் செயலாளர், வார்டு உறுப்பினர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

