துவார் அருகே நாய் குறுக்கே வந்ததால் விபத்து

துவார் அருகே நாய் குறுக்கே வந்ததால் விபத்து
X
விபத்து செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த குழப்பன்பட்டியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (75). இவர் துவாரிலிருந்து புதுக்கோட்டைக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, துவார் அருகே, நாய் குறுக்கே வந்ததால் பைக்கிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, மழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story