வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு

உலகப் புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா வருகிற 29 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் விழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், சுகாதார அலுவலர் பிரவீன் கிருஷ்ணகுமார் உத்தரவின்பேரில், வட்டார மருத்துவ அலுவலர் விஜயகுமார் ஆலோசனைப்படி, வேளாங்கண்ணி பேரூராட்சி வார்டு பகுதிகளில் தீவிரமாக கொசுப்புழு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சு.மோகன் டெங்கு களப்பனையாளர்கள் மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், வீடு வீடாக ஆய்வு செய்து டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குடிநீர் குடங்கள், கீழ்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். இதன் மூலம் கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்க முடியும். மேலும், கடுமையான காய்ச்சல், சளி, இருமல் முதலிய அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், எந்த சூழ்நிலையிலும் தனக்குத்தானே மருத்துவம் செய்து கொள்வதை தவிர்ப்பதுடன், கொசு புழுக்கள் நன்னீரில் உற்பத்தி ஆனால் அதனை கண்காணித்து உடனடியாக அழிக்க வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தினர்.
Next Story

