நாகை மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தின விழா

X
நாகை மாவட்ட மைய நூலகத்தில், நூலகர் தின விழா மாவட்ட நூலக அலுவலர் ஆ.சுமதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மைய நூலக பொறுப்பு நூலகர் தி.மீனாகுமாரி வரவேற்றார். வாசகர் வட்டத் தலைவர் ஜவகர் வாழ்த்தி பேசினார். தமிழ் செம்மல் புலவர். மு.சொக்கப்பன் சிறப்புரை ஆற்றினார். நூலக தந்தை எஸ்.ஆர்.அரங்கநாதனின் திருவுருவ படத்திற்கு நூலகர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
Next Story

