சாந்துவார்பட்டி -புதிய பகுதிநேர நியாய விலை கடையை திறந்து வைத்தார் எம் எல் ஏ.

சாந்துவார்பட்டி -புதிய பகுதிநேர நியாய விலை கடையை திறந்து வைத்தார் எம் எல் ஏ.
சாந்துவார்பட்டி -புதிய பகுதிநேர நியாய விலை கடையை திறந்து வைத்தார் எம் எல் ஏ. கரூர் மாவட்டம் , கடவூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சாந்துவார் பட்டியில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி , பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புதிய பகுதிநேர நியாய விலை கடையை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி இன்று திறந்து வைத்து கடையில் குத்து விளக்கு ஏற்றினார். பிறகு அப்பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் மளிகை பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கடை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
Next Story