காமராஜ் கல்லூரி முன்பு வேகத்தடை : மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை!

X
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஹசன் அளித்த மனுவில், "தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் அதன் அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்திலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். அதுமட்டுமல்ல காமராஜ் கல்லூரி முன்புள்ள சாலை ஆயிரக்கணக்கான வாகனங்களும், பொதுமக்களும் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலையாக இருக்கிறது. வாகனங்களின் அதிவேகத்தால் தினந்தோறும் இந்த சாலையில் விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆகையால் காமராஜ் கல்லூரியில் படிக்கின்ற கல்லூரி மாணவர்களை விபத்திலிருந்து பாதுகாக்க காமராஜ் கல்லூரி முன்பு வேகத்தடை அமைத்து பொதுமக்களையும் கல்லூரி மாணவர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்தார். மகபூப் பாட்ஷா, கலியாவூர் சேக் மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story

