குறுமைய அளவிலான விளையாட்டு போட்டி

குறுமைய அளவிலான விளையாட்டு போட்டி
X
ஏற்காடு அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் சாதனை
சேலம் ஊரகம் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்றன. இதில் ஏற்காடு மாதிரி பள்ளிகள் உள்பட பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து, கடற்கரை வாலிபால் மற்றும் சிலம்ப போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏற்காடு மாதிரி பள்ளி மாணவர்கள் 19 மற்றும் 17 வயதிற்குட்பட்டோருக்கான கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்தனர். பீச் வாலிபால் போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடமும், 17 மற்றும் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 2-வது இடமும் பிடித்தனர். மேலும் 19 வயதிற்குட்பட்டோர் பெண்கள் பிரிவு சிலம்ப போட்டியில் இப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி மது முதலிடம் பிடித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக்குமார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற உதவியாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமாரை பாராட்டினார்.
Next Story