இந்திய சுதந்திர தினத்திற்கு மரியாதை செய்யும் வகையில்
கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக, ஆண்டுதோறும் இந்திய சுதந்திர தினத்தன்று இந்திய சுதந்திரத்துக்கு மரியாதை செய்யும் பொருட்டு அரசு மூவர்ண கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவது வழக்கம். கடந்த 2022-ம் ஆண்டு முதல் நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள பெரிய மினராவில், இந்திய சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று மூவர்ண வண்ண விளக்குகளால் அலங்கரித்து, நாகூர் தர்கா நிர்வாகத்தினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். 150 அடி உயர நாகூர் ஆண்டவர் பெரிய மினரா வண்ண விளக்குகளால் மின்னுவது அகில இந்திய அளவில் புகழ் பெற்றது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் தமிழக அளவில் இதுதான் டிரெண்டிங்காக இருக்கும். டில்லியில் உள்ள புகழ் பெற்ற நிறுவனம் தலை சிறந்த மூவர்ண வண்ண அலங்காரங்களில் ஒன்றாக நாகூர் தர்கா பெரிய மினரா மூவர்ண கொடி அலங்காரத்தை வகை படுத்தியுள்ளது. இந்த வருடமும் சுதந்திரத்தை கொண்டாடுவதற்காக, நாகூர் ஆண்டவர் தர்கா நிர்வாகம் பெரிய மினரா முழுவதும் மூவர்ண மின் அலங்காரம் செய்து உள்ளது. அதனை பொது மக்கள் ரசித்து வருகின்றனர்.
Next Story



