போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை கல்வியியல் கல்லூரியில் போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள, தியாகராஜர் கல்வியல் கல்லூரியில் Anti Drug Club மன்றத்தின் போதைப்பொருள்கள் தடுப்பு தொடர்பான 230-வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர், கல்லூரி பேராசிரியர்கள் , மாணவ-மாணவிகள் போதைப்பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
Next Story